அவதூறு பேச்சு ..!கருணாஸ் அதிரடியாக கைது ..!ஹெச்.ராஜா எப்போது கைது …!
இன்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்து ஹெச்.ராஜா கைது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டினார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.
இதனால் திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அவர் திண்டுக்கல்லில் உள்ள இந்து முன்னணி சார்பில் நடைபெறும் விநாயகர் சதூர்த்தி பொதுக்கூட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார்.அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது பேசிய இந்துமுன்னணிப் பிரமுகர் வினோத் என்பவர் நாளிதழ் செய்தியைக் காட்டி, ”ஹெச்.ராஜா தலைமறைவாம். பேப்பரில் போட்டிருக்கிறார்கள். உங்களுக்கு எதாவது தெரியுதா? சிங்கம் இங்கேதான் உட்கார்ந்திருக்கு, முடிந்தால் கைது செய்து பார்” என்று சவால் விடுத்தார்.
அதேபோல் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் மயிலாடுதுறை அருகே பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், நான் தலைமறைவாக இல்லை.தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது தெரியாது என்றும் கூறினார்.
அதேபோல் கடந்த ஞாயிறு அன்று (செப்டம்பர் 16 ஆம் தேதி ) முக்குலத்தோர் புலிப்படை ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகரும் சட்ட மன்ற உறுப்பினருமான கருணாஸ்
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, காவல்துறை அதிகாரிகள் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் கருணாஸ் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்தது . மேலும் தலைமறைவாக உள்ள எம்எல்ஏ கருணாஸை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா எப்போது கைது செய்யப்படுவார் என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.குறிப்பாக அவதூறாக பேசியது தொடர்பாக ஹெச்.ராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் அவர் நாட்டை ஆளும் பாஜகவை சார்ந்தவர் என்பவராலே கைது செய்ய தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.குறிப்பாக தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து தமிழகத்தில் வருமானவரித்துறை ரெய்டு அதிகமாக நடைபெற்று வருகிறது.அதுவும் ஆளும் அதிமுக மீது அதிக சோதனை நடைபெற்றுள்ளது.இதனாலே அதிமுக அரசு ஹெச்.ராஜாவை கைது செய்ய தயங்கி வருவதாக தகவல் வருகின்றது.இனி வரும் நாட்களில் தான் தெரியும் ஹெச்.ராஜா கைது செய்யப்படுவாரா ?இல்லையா ?என்பது …