“கைது செய்யப்பட்ட கருணாஸ்”களமிரங்கிய முக்குலோத்தோர் புலிப்படை கைது…!!
அவதூராக பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தபட்டார்.
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறையை சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தாற்காக இன்று அதிகாலை அதிரடியாக கருணாஸ் கைது செய்யப்பட்டார்.
சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது.இந்நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவரை காவல் துறையினர் கைது செய்யதனர்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ்,’என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.சட்டம்ன்ற உறுப்பினராக இந்த வழக்கை சந்திக்க தயாராக உள்ளேன் என்று தெரவித்தார்.
இந்நிலையில் சர்ச்சசைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசை இன்று அதிகாலையில் போலீசார் கைது செய்து தற்போது நுங்கப்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து அவரை எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்த போலிசார் அவரை அழைத்து சென்றனர்.இந்நிலையில் விசாரணை முடிந்த நிலையில் அக்டோபர் 5ஆம் தேதி வரை சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான கருணாஸ் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே கருணாஸ் கைதை கண்டித்து முக்குலோத்தோர் புலிப்படை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கருணாஸ் ஆதரவாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கோவை குறிச்சியில் கருணாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து முக்குலத்தோர் புலிப்படை சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
DINASUVADU