சீர்காழியில் தன்ராஜ் என்பவர் நகை அடகு கடை வைத்துள்ளார். இன்று அதிகாலை தன்ராஜ் வீட்டில் காலை 6 மணி அளவில் வட மாநிலத்தை சார்ந்த 4 பேர் வீட்டில் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த 15 கிலோ தங்கம் நகையை கொள்ளையடித்து தன்ராஜ் மனைவி ஆஷா, அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கழுத்தறுத்து கொன்று விட்டு நகைகளுடன் வீட்டில் இருந்த சிசிடிவி ஹார்ட் டிஸ்க்கையும், தன்ராஜின் காரையும் திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, 3 வடமாநில கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடன் இருந்த 2 நகை பைகளில் ஒரு பையை வயலில் வீசியதால் அதை எடுக்க சென்றபோது, 3 பேரில் ஒருவர் போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர்.
இந்நிலையில், சீர்காழியில் இன்று காலை நடந்த இரட்டைக் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட கருணாராம் என்பவரை போலீசார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர். தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் ஆகியோரை கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…