கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வோம் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 லட்சம் தொண்டர்களுக்கு கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவர் நினைத்தது போல் தொண்டர்கள் என்ணிக்கை இல்லை.இதன் பின்னரும் தனது பேட்டியை குறைத்து வந்தார்.அது மட்டும் அல்லாமல் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியும் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்து வந்தார்.
இன்று கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.விழாவில் பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்.ஆனால் கருணாநிதியின் மொத்த மகனான அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இது தொடர்பாக மதுரையில் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…