கருணாநிதி சிலை திறப்பு விழா:யாரும் அழைக்கவில்லை…!நான் டிவியிலே பார்த்துக்கொள்கிறேன் …!அழகிரி அதிரடி திட்டம்

Default Image

கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வோம் என்று  மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள்  திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு திமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.பொருளாளராக துரைமுருகனும்,முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலுவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Image result for mk alagiri mk stalin
ஆனால் மு.க.அழகிரி கட்சியில் தனக்கும் பதவி கிடைக்கும் என்று எண்ணினார்.ஆனால் அவருக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை.இதன் வெளிப்பாடாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வந்தார்.அதேபோல் செப்டம்பர் 5 ஆம் தேதியும் பேரணி ஒன்றையும் அறிவித்தார்.அதில் 1 லட்சம் தொண்டர்களுக்கு கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.ஆனால் அவர் நினைத்தது போல் தொண்டர்கள் என்ணிக்கை இல்லை.இதன் பின்னரும் தனது பேட்டியை குறைத்து வந்தார்.அது மட்டும் அல்லாமல் கட்சியில் சேர்க்க வலியுறுத்தியும் ஒரு சில பேட்டிகளில் தெரிவித்து வந்தார்.
இன்று கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது.விழாவில்  பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்.ஆனால் கருணாநிதியின் மொத்த மகனான அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்நிலையில்  இது தொடர்பாக மதுரையில் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்துக்கொள்வோம்  என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்