மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
கலைஞரின் அரும்பணிகளை போற்றும் விதமாக கலைஞரின் வாழ்வின் சாதனைகள், சிந்தனைகளை, இளைய தலைமுறையினரும் அறியும் வகையில் நவீன விளக்கப்படங்களுடன் காமராஜர் சாலை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும் என சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி கலைஞர் என்று பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம். 13 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தோல்வி அவரை தொட்டதே இல்லை; வெற்றி அவரை விட்டதே இல்லை. ஐந்து முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர் கலைஞர், இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது.
தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிமை பெற்றுத் தந்தவர் கலைஞர். நவீன தமிழ் நாட்டை உருவாக்கிய சிற்பி தான் கலைஞர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…