தமிழக மக்களின் குரலாக இருந்தார் கருணாநிதி …!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் கருணாநிதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.அவர் பேசுகையில், கருணாநிதி சாதாரண அரசியல் தலைவர் அல்ல, அவர் தமிழக மக்களின் குரலாக இருந்தார்.வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் கருணாநிதி.ஒரு பெரிய வீட்டில் கருணாநிதி வசிப்பார் என எதிர்பார்த்தேன். அவர் வீட்டை பார்த்த போது எளிமை, நேர்மையை உணர்ந்தேன்
உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி ஆகியவற்றை மத்திய அரசு சீரழித்துவிட்டது.நாட்டின் கலாச்சாரத்தை, பண்பாட்டை மதிக்க வேண்டியதில்லை என நினைக்கும் அரசு மத்தியில் உள்ளது.இந்தியாவை சீரழிக்கும் இந்த அரசை நீடிக்க வைக்க கூடாது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.