கருணாநிதி சிலை திறப்பு விழா:காங்கிரஸ் தலைவர்கள்,3 மாநில முதல்வர்கள் வருகை …!பாதுகாப்பு பணியில் 5,000க்கும் மேற்பட்ட போலீஸார்…!
கருணாநிதி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் மூன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்க உள்ளார்.அதேபோல் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கேரளா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்க உள்ளனர்.இந்த விழாவிற்கு ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னை விமான நிலையம், அண்ணா அறிவாலயம், ஒய்எம்சிஏ மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பட்டு செய்யப்பட்டுள்ளது.