சென்னை கடற்கரை சாலையில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
8.57 ஏக்கர் பரப்பளவில் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடம் அமைந்துள்ளது. நுழைவு வாயிலில் பேரவையின் பேரறிஞர் அண்ணா நினைவிடம் , கலைஞர் கருணாநிதி நினைவிடம் என எழுதப்பட்டுள்ளது. அந்த நுழைவாயில் இருந்து உள்ளே செல்லும் பொழுது பேரறிஞர் அண்ணா அமர்ந்து படிப்பது போன்ற சிலை உள்ளது. வலது புறத்தில் இளங்ககோவடிகள், இடதுபுறத்தில் கம்பர் சிலை உள்ளது. நினைவிடங்களின் இருபுறமும் புல் வெளிகள் அமைந்துள்ளன.
இடப்புறத்தில் ‘அண்ணா அருங்காட்சியம்’ உள்ளது. பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது” என எழுதப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா நினைவிடத்தை கடந்து சென்றால், கலைஞர் அவர்கள் அமர்ந்து எழுதும் வடிவிலான சிலையைக் காணலாம். சிலையைக் கடந்து சென்றால் கலைஞர் நினைவிடத்தில் ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர், இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என எழுதப்பட்டுள்ளது.
கருணாநிதியின் நினைவிடத்தின் கீழ் ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்ட்டுள்ளது. அந்த அருங்காட்சியின் நடைபாதையின் வலது புறத்தில் திருவள்ளுவர் சிலை, குடிசை மாற்று வாரியம் உள்ளிட்டவற்றின் புகைப்படங்கள், இடது புறத்தில் தமிழ் தாய் வாழ்த்து தொடர்பாக கலைஞர் கருணாநிதி, மு.கஸ்டாலின் பிறப்பித்த அரசாணைகள் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்தின் அருகில் கலைஞரின் எழிலோவியங்கள் என்ற அறையில் கலைஞர் கருணாநிதி பல்வேறு புகைப்படங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் அவரது படைப்புகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளது. “உரிமை போராளி கலைஞர்” என்ற அறையில் சென்னை கோட்டையில் முதல் முறையாக கலைஞர் கருணாநிதி தேசியகொடி ஏற்றிய அமைப்பு இடம்பெற்றுள்ளது.
அதேநேரத்தில் கோபாலபுரத்தில் கலைஞர் கருணாநிதி அமர்ந்து இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. அதன் அருகில் மக்கள் புகைப்படம் எடுப்பதற்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. வலது புறத்தில் கலைஞர் கருணாநிதி மெழுகு சிலை உள்ளது. அதனுடன் அவர் எழுதிய 8 நூல்கள் பெயர்களும் உள்ளது. பின்னர் “அரசியல் கலை அறிஞர் கலைஞர்” அறையில் கருணாநிதி குறித்த 20 நிமிட படக்காட்சி தொகுப்பு ஒளிபரப்பப்படுகிறது.
அடுத்தததாக ‘சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்’ என்ற அறை உள்ளே திருவாரூர் முதல் சென்னை வரை ரயிலில் பயணிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அறைக்கு வெளியே நடைபாதை இருபுறமும் பல்வேறு தலைப்புகளில் கலைஞர் கருணாநிதி அரிய புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் 5 தொலைக்காட்சி உள்ளன. அதில் கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும் அந்த பகுதியில் காந்தவிசையைப் பயன்படுத்தி அமர்ந்த நிலையில் கருணாநிதி அந்தரத்தில் இருப்பது போன்ற காட்சி உள்ளது. பாம்பன் பாலம், அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்டவற்றின் தோற்றங்கள் வண்ண விளக்கு ஒளியில் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…