கருணாநிதி நினைவிடம் – வரும் 26ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

Kalaignar Memorial

சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை பிப்.26ம் தேதி முலதமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழக அரசின் அறிவிப்பின்படி, சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

2021இல் அதிமுக 7 எம்.பி சீட்களை வென்றுள்ளது.! இபிஎஸ் போட்ட புது கணக்கு.!

ஏற்கனவே கருணாநிதி நினைவிட அமைக்கும் பணி 97% நிறைவு பெற்று இருந்தது. இதனால் நினைவிடம் திறப்பு விழாவிற்காக முதலமைச்சரிடம் நேரம் கோரப்பட்டிருந்தது. இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று, கலைஞர் நினைவிடம் முன்பு மிகப்பெரிய பேனா சிலை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளது.

இந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை மெரினாவில் புனரமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தை முதலமைச்சர் வரும் 26ம் தேதி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கலை, இலக்கியம், அரசியல் உள்ளிட்ட சாதனைகளை நினைவு கூறும் வகையில் நினைவிட முகப்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்