மறைந்த திமுக தலைவர் கருணாநிதி குறித்து வார தாள் ஒன்றில் வெளிவந்த பழைய நிகழ்வை சுட்டிக்காட்டிய ஹெச்.ராஜா.
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக சார்பில் மாநிலக் குழு செயலாளர் கரு. நாகராஜனும், காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி.ஜோதிமணியும் மற்றும் பல்வேறு கட்சி சேர்த்தவர்கள் கலந்துகொண்டனர். இதில், கரு.நாகராஜன் பேசும்போது, எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். மேலும், அவருடைய பேச்சில் ஜோதிமணியை ஒருமையில் குறிப்பிட்டுப் பேசினார். இந்தப் பேச்சுக்குக் எம்.பி. ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்து, உடனடியாக விவாதத்திலிருந்து வெளியேறினார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஜோதிமணிக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள். கரு.நாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். ஒருபக்கம் ஹெச்.ராஜா, அவரது ட்விட்டர் பக்கத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்கள், பெண் என்பதால் எவ்வளவு மரியாதையோடு திருமதி.இந்திரா காந்தி அவர்களை பற்றி பேசியுள்ளார் என்றும் இந்த மாதிரி கரு.நாகராஜன் அவர்களுக்கு பேசத் தெரியவில்லையே என்று பதிவிட்டுள்ளார்.
அதாவது, மதுரையில் பொதுக் கூட்டத்தில் திமுகவினர் நடத்திய போராட்டத்தில் இந்திரா காந்தி அம்மையாருக்கு கல்லடி பட்டு தலையில் ரத்தம் ஒழுகியதை திமுக தலைவர் கருணாநிதி அம்மையாருக்கு மாதவிலக்காய் இருந்திருக்கும் என்று சொல்லி தமிழனின் திராவிட பெருமையை தரணிக்கு காட்டினார் என்று ஒரு வார தாளில் வெளிவந்த செய்தியை ஹெச்.ராஜா சுட்டிக்காட்டினார்.
மேலும் மற்றோரு பதிவும் போட்டுள்ளார். அதில், கபடி விளையாடுவது என்றால் கோட்டை தொட்டுவிட்டு வருவது ரசிக்காது. கோட்டைத் தாண்டி ஏறி அடிப்பது தான் ஆட்டம். அதனால் இனி விவாதம் என்கிற பெயரில் தொலைக்காட்சிகளில் மாண்புமிகு பிரதமரை யார் இழிவாகப் பேசினாலும், அதே பாணியில் Tit for Tat நமது கட்சியினர் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…