ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கருணாநிதியே உதாரணம்…! துரைமுருகன்
தன்னால் கட்சிக்கு லாபம் என்று நினைப்பவர்கள் ரத்தநாளம் போன்றவர்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செங்குன்றத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், ஒரு தொண்டன், ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கருணாநிதியே உதாரணம். பேரவையில் இரங்கல் தீர்மானத்தை எதிர்க்கட்சி, தோழமை கட்சிகள் பாராட்டியது கருணாநிதிக்கு மட்டும்தான் . தன்னால் கட்சிக்கு லாபம் என்று நினைப்பவர்கள் ரத்தநாளம் போன்றவர்கள். கட்சியால் தனக்கு என்ன லாபம் என நினைப்பவர்கள் ரத்தப் புற்றுநோய் போன்றவர்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.