பள்ளிப் பருவத்திலேயே நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கருணாநிதி

Default Image

நாளை திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.அவரது  தனது வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நடந்த சில ஸ்வாரசிய விஷயங்களை பார்ப்போம்….

கருணாநிதியின் இயற்பெயர் முத்துவேல் கருணாநிதி ஆகும்.1924-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் உள்ள திருக்குவளை என்னும் இடத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையார் என்பவருக்கு மகனாக பிறந்தார்.கருணாநிதிக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார். பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். பள்ளியிறுதித்தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை.

கருணாநிதி தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தமது வளரும் பருவத்தில்,தன்னுடன் உள்ள மாணவர்கள் சிலரின் உதவியுடன் திருவாரூர் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்னும் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை 7-7-1944ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது.இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. அதன் வழியாக மாணவநேசன் என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையை வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருப்பெற்றது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார்.

முரசொலி என்னும் துண்டு வெளியீட்டை 1942-ஆம் ஆண்டில் வெளியிட்டார் கருணாநிதி. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோரை அழைத்து தம் மாணவர் மன்ற அணியில் உள்ளவர்களுடன் கொண்டாடினார். இடையில் சில காலம் அவ்விதழ் தடைபட்டது. பின்னர் 1946 முதல் 1948 மாத இதழாக நடத்தினார்.பின் மீண்டும் இதழ் தடைபட்டது. மீண்டும் 1953-ஆம் ஆண்டு மாத இதழாக சென்னையில் தொடங்கினார். 1960ஆம் ஆண்டில் அதனை நாளிதழாக மாற்றினார்.இது தான் கருணாநிதி தனது ஆரம்ப கால வாழ்க்கையில் சாதித்தது ஆகும். ..

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்