ஜோதிமணி பற்றி கரு.நாகராஜன் சர்ச்சை கருத்து.! வலுக்கும் கண்டனம்.!

Published by
Dinasuvadu desk

விவாத நிகழ்ச்சியில் ஜோதிமணியைத் தரக்குறையாகப் பேசி   கரு.நாகராஜன் எதிராக பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரிசெய்ய ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றும்போது அறிவித்தார். அதனைத் தொடர்ந்து  சுயசார்பு இந்தியா என்ற திட்டத்தின் கீழ் 5 கட்டங்களாக   பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. சமீபத்தில், ராகுல் காந்தி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் வாகன ஏற்பாடு செய்து கொடுத்து, அவர்களுடன் அமர்ந்து பேசினார். இது குறித்து நிர்மலா சீதாராமன்  “ஏன் அமர்ந்து பேசிக் கொண்டு. அவர்களுடைய பொருட்களை எடுத்து நடந்து செல்லலாமே” என கூறினார். இந்தப் பேச்சுக்கு  கடும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இன்னல்கள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப்பட்டது.  இந்த விவாத நிகழ்ச்சியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் சார்பில் எம்பி ஜோதிமணி பாஜக சார்பில் கரு.நாகராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது கரு.நாகராஜன் , எம்.பி. ஜோதிமணியை தரக்குறைவாக விமர்சித்தார். இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, விவாதத்திலிருந்து எம்.பி. ஜோதிமணி வெளியேறினார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி, கரு.நாகராஜனுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. ஜோதிமணிக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும், பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியைச் சேர்ந்த கரு.நாகராஜன். என  ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின், எம்.பி சு.வெங்கடேசன் , எம்.பி திருமாவளவன்  ஆகியோர் எம்.பி ஜோதிமணிக்கு ஆதரவாகப்  கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

8 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

8 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

9 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

9 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

9 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

10 hours ago