அடிமைகள் முன்னேற்ற கழகம் என மாற்றிவிடுங்கள்.! இபிஎஸ்-க்கு அறிவுரை கூறிய திமுக செயலாளர்.!   

Default Image

அண்ணா எழுதிய புத்தகங்கள் மற்றும் சில புத்தகங்களை இபிஎஸ்க்கு அனுப்பிவிட்டு, திராவிடம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் அதிமுகவை அடிமைகள் முன்னேற்ற கழகம் என மாற்றிவிடுங்கள் – என திமுக சுற்றுசூழல் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இபிஎஸ்க்கு டிவிட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார். 

திமுக கட்சியின் சுற்றுசூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேயா சிவசேனாபதி , அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கார்த்திகேயா சிவசேனாபதி குறிப்பிட்டு எழுதுகையில், ‘ அன்புள்ள எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு வணக்கம். நலம் ,

அண்மையில் உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைத்தளங்களில் பார்த்தேன். மேலும் சிலவற்றை செய்தித்தாள்களில் படித்தேன். அதனால் எனக்கு பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் தான் ஏற்பட்டது.

பெரிய கடிதம் உங்களுக்கு எழுதி பயனில்லை. ஆதலால் அண்ணா நாமம் வாழ்க , புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க !! என்று தினந்தோறும் கூறி, ஆட்சி நடத்திய மறைந்த ஜெயலலிதா அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடிய நீங்களும், உங்கள் கட்சியினரும்,

அண்ணா என்ன சொன்னார் ? அண்ணா என்ன பேசினார்? அண்ணா என்ன எழுதினார் ? அண்ணா எதைக் கடைப்பிடித்தார் ? என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குப் பின் கருத்துகளை தெரிவியுங்கள். எதிர்க்கட்சித் தலைவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர்,

என்றெல்லாம் பதவியை வைத்துக்கொண்டு, சுயநலமாக செயலபடாதீர்கள். வெட்கப்பட்டுத் தலைகுனியக் கூடிய ஒரு நிலைமையை, திராவிடம் என்ற பெயருக்கும், அறிஞர் அண்ணா என்ற பெயருக்கு உருவாக்கி வைத்துள்ளீர்கள். இத்துடன் அறிஞர் அண்ணா எழுதிய ஐந்து புத்தகங்களை உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.

இதை நீங்களும் உங்களது முப்பத்து மூன்று முன்னாள் அமைச்சர்களும் அமர்ந்து படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். படிப்பதற்கு முடியாவிட்டால் யாரையாவது படிக்கச் சொல்லி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

திரு.சுப வீரபாண்டியன், திராவிட கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி அண்ணாமலை அக்கா, போன்றோரை அழைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுவிலோ அல்லது பொதுக்குழுவிலோ தயவு செய்து அவர்களிடம் திராவிடம் என்றால் என்ன ? அறிஞர் அண்ணா எதற்காக இந்த கட்சியை உருவாக்கினார் ?என்றெல்லாம் தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு பேசுங்கள்.

பா.ஜ.க விற்கு அடிமையாக இருப்பதையும், திரு அண்ணாமலக்கு அடிமையாக இருப்பதையும், விட்டுவிட்டு நல்ல அரசியலைக் கையில் எடுங்கள் . அப்படி இன்றி அண்ணா கூறியதை உங்களால் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதானால், தயவு செய்து கட்சி பெயரை அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றிக் கொள்ளுங்கள்.

அறிஞர் அண்ணா பெயரையும் திராவிடத்தையும், அங்கே இருந்து எடுத்துவிட்டு அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றி அதற்குப் பின் ஆரிய அடிமைகளாக வாழுங்கள். நன்றி, வணக்கம் .’ என அந்த டிவிட்டரில் திமுக சுற்றுசூழல் பிரிவு செயலாளர் கார்த்திகேயா சிவசேனாபதி எடப்பாடி பழனிசாமிக்கு பதிவிட்டுள்ளர்.

நீதி கட்சி தலைவர் பெரியாரின் தலைமை உரை, பனகல் அரசர், கருவறை நுழைவுப் போராட்டம், திராவிடர்கள் யார், திராவிட தந்தை டாக்டர் சி.நடேசன், ஆரிய மாயை, அண்ணா கண்ட தியாகராயர், பெரியாரின் குடந்தை பேருரை, இவர்தான் பெரியார், திராவிட இயக்கத்தின் சுருக்கமான வரலாறு ஆகிய புத்தகங்களை தான் இபிஎஸ்-க்கு, சிவசேனாபதி அனுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்