வரும் நவம்பர் 26ஆம் தேதி உலகப்புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றும் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10 நாள் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா இன்று அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.
பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கடந்த செவ்வாய் கிழமை எல்லை தேவதைகளுககான பூஜையுடன் ஆரம்பமானது. அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 2 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலைநாதர், உண்ணாமுலை அம்மன் , முருகன், விநாயகர், சண்டீசகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
பூஜை நிறைவடைந்ததை அடுத்து காலை 5.30 மணியளவில் 64 அடி உயர தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் கூற, பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட, ஆயிரக்கணக்கான பக்த்ர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று மாலை சாமிகள் ஊர்வலம் நடைபெறும்.
10 நாள் விழாவில் 2ஆம் நாள் (நாளை) முதல் 9ஆம் நாள் வரையில் காலையில் விநாயகர், முருகன், சண்டீகேஸ்வரர் வீதி உலாவும், மாலையில் பஞ்சமூர்த்திகளின் வீதி உலாவும் நடைபெறும். வரும் 23ஆம் தேதி பஞ்சமூர்த்திகளின் தேரோட்டம் நடைபெறும். அதன் பிறகு 10ஆம் நாள் கார்த்திகை தீப திருவிழா.
10 ஆம்நாள் கார்த்திகை தீப திருநாளான்று காலை 4 மணிக்கு அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர், பரணி தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு, மாலை 6 மணிக்கு உலக புகழ்பெற்ற மகாதீபம், 2668 அடி உயரத்தில் ஏற்றப்படும். அன்றைய தினம் தான் சிவனும் , சக்தியும் சேர்ந்த அர்த்தநாதீஸ்வரராக அண்ணலையார் காட்சி தருவார்.
திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றுப்படும் கார்த்திகை தீப திருவிழாவை காண தமிழகத்தில் பல்வேறு இடஙக்ளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் பக்த்ர்கள் வசதிக்காக போக்குவரத்து, தங்குமிடம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அரசு மேற்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று, கோயில் யானை தெய்வானை மிதித்ததில்…
வாஷிங்டன் : உலக தொழில்நுட்ப தலைமுறையின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியானது செயற்கை நுண்ணறிவு எனும் AI தொழில்நுட்பத்தை தாங்கி வேகமாக…
டெல்லி : நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத், தனது இயக்குனராக அறிமுகமாகும் "எமர்ஜென்சி"படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.…
டெல்லி : மக்களவை தேர்தல் மற்றும் மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் படியாக 'ஒரே நாடு ஒரே…
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…