இந்துக்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். இன்று மக்கள் தங்களது வீட்டு வாசலில், வண்ண கோலமிட்டு, களிமண், அகல்விளக்குகளை வாங்கி எண்ணெய் விட்டு, திரி வைத்து விளக்கேற்றி வைப்பர்.
திருவண்ணாமலையின் அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது, இன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திருவண்ணாமலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருவண்ணாமலை கோயிலில் தீபாராதனை செய்யப்பட்டு மகாதீப கொப்பரை நேற்று மலை மீது எடுத்துச்செல்லப்பட்டது.
இந்நிலையில், இன்று அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அடுத்ததாக 2,668 அடி உயர மலை மீது நாளை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதனால், தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய்யும், துணிகளும் தயார் நிலையில் உள்ளது.
இதற்கிடையில், கொரோனா காரணமாக தீபத்திருவிழாவுக்கு வெளியூர் பக்தர்களுக்கு வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை 3 நாட்களுக்கு திருவண்ணாமலை நகருக்குள் வெளியூர் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…