கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை!

Published by
Venu
ஏர்செல் – மேக்ஸிஸ் விவகாரம் தொடர்பாக  கார்த்தி சிதம்பரம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர் .

டெல்லி, சென்னை உட்பட கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் இந்த சோதனை நடந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஏர்செல் – மேக்ஸிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்புடைய வழக்குகளுக்காக, கடந்த ஆண்டும், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
வழக்கு விவரம்:
மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இது தொடர்பாக சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ ஏற்ககெனவே சோதனை நடத்தியது.
இதுமட்டுமின்றி, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மற்றும் வாசன் ஹெல்த்கேர் நிறுவனத்தில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் முதலீடு செய்வதற்கான எப்ஐபிபி ஒப்புதல் பெறுவதற்காக, அட்வான்டேஜ் ஸ்ட்ரேட்டஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்துள்ளது. இதற்காக கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய இந்த நிறுவனத்துக்கு ஆலோசனை கட்டணமாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

1 hour ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

3 hours ago