பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்கள் – மோடியை கிண்டலடித்த கார்த்தி சிதம்பரம்

Default Image

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்கள் என்று கூறி பிரதமர் மோடியை கிண்டலடித்த காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்தல் பேட்டை உயர்த்தி காண்பிப்பார்கள். அதுபோன்று பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்ததால், பிரதமர் மோடியும், நிர்மலா சீதாராமனும் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சரும் பேட்டை உயர்த்தி காண்பிக்க வேண்டியது தான் என்று விமர்சித்துள்ளார்.

இதனுடைய பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் மத்திய அரசு தான். பணமதிப்பு நீக்கம், குழப்பமான ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கால் பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது என கூறியுள்ளார். இதனால் இவர்களுக்கு வருவாய் வரவேண்டும் என்பதற்காக பல வரிகளை போட்டுள்ளார்கள். வாரிசுமையை அதிகரித்து கொண்டே சென்றதால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கச்சா எண்ணெய் விலை வெளிநாட்டு சந்தையில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதைவிட குறைவாகத்தான் உள்ளது. நாங்கள் இருக்கும்போது 100 டாலர் விற்றது. தற்போது 60 டாலருக்குத்தான் விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும், அவர்களின் வாரி சுமையால் பெட்ரோல் விலை ரூ.100 ஆக வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியை விட்டு செல்லும்போது, ரூ.70 ஆக இருந்தது என தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் சாசனத்துக்கு, இந்திய கூட்டமைப்புக்கு விரோதமானது தான் இந்த செஸ் வரி. பெட்ரோல் உயர்வுக்கு காரணம் காங்கிரஸ் தான் என்று மோடி கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணம் முகலாயர்களாக இருப்பார்கள் என நினைக்கிறன் என பிரதமர் மோடியை கிண்டலடித்து பதில் தெரிவித்துள்ளார்.

பிரதமராக 7 ஆண்டுகள் ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கும் பிரதமர் மோடி, கடந்த காங்கிரஸ் ஆட்சியால் தான் பெட்ரோல் விலை உயர்கிறது என்று கூறுவதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். வரி கூட்டிக்கொண்டு போவதால் விலை ஏறுகிறது. அதை குறைக்க வேண்டியது தானே என்றும் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் கூட இங்க பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்