கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் தலைமை வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் எந்த தொகுதியில் வேண்டுமென்றாலும் நிற்பேன் எனவும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் கார்த்தி சிதம்பரம் பேசும் போது, “சிவங்கையில் போட்டியிட திமுகவினரும், காங்கிரஸ் கட்சியிலேயே சிலரும் முயல்வது குறித்து கேட்கிறீர்கள், ஜனநாயக நாட்டில் இது போன்ற போட்டிகள் இயல்பு தான், உயிரோட்டமான காங்கிரஸ் கட்சியில் இதுபோல யாரும் தங்களுக்கான வாய்ப்பைக் கேட்பதில் தவறு இல்லை.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லவே இல்லை – எடப்பாடி பழனிசாமி..!
நான் கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன், கட்சி சீட் கொடுத்தால் தேர்தலில் எந்த தொகுதியில் வேண்டுமென்றாலும் நிற்பேன், நான் போட்டியிடுவதா வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். என்னை பொருத்தவரை எம்.பி பதவிக்குரிய பொறுப்புகளை முழுமையாக பயன்படுத்தி பணி செய்திருக்கிறேன், 6 சட்டசபை தொகுதிக்கும் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதோடு மக்களவையிலும் அரசியல் சார்ந்து பேசியிருக்கிறேன்” என்றார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள் (ஜனவரி 6) அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் உரையுடன்…
டெல்லி: கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு, இந்திய அணியின் வேகப்பந்து…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தந்தை பெரியார் குறித்து பல்வேறு…
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளதாக…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான…