மகனை தொடர்ந்து தந்தையை விசாரிக்கத் திட்டம் !

Default Image

கார்த்தி சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில்  மேலும் 5 நாள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ப.சிதம்பரத்திடமும் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

2007-ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டுவதற்கு முறைகேடாக உதவியதாக, அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு, ஒரு நாள் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டார். அவரை மேலும் 14 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்குமாறு சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

முறைகேடு நிகழ்ந்த காலத்தில் அட்வண்டஜ் ஸ்ட்ரடேசிக்  கன்சல்டிங் (Advantage Strategic Consulting) நிறுவனத்திற்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான ஆவணங்கள் மற்றும் அந்நிறுவனத்துடன் கார்த்தி சிதம்பரத்தின் தொடர்பு குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் சி.பி.ஐ. கூறியது. முறைகேடான பணப் பரிமாற்றம் தொடர்பாக அதிர்ச்சிதரத் தக்க சான்றுகள் கிடைத்துள்ளதாகவும், பணப் பரிமாற்றம் நடைபெற்ற வங்கிக் கணக்குகளை வெளிநாடு சென்றிருந்தபோது கார்த்தி சிதம்பரம் மூடிவிட்டதாகவும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து கார்த்தி சிதம்பரத்தை மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை உண்ண அனுமதிக்குமாறு கார்த்தி தரப்பு விடுத்த கோரிக்கை ஏற்க மறுத்துவிட்ட நீதிமன்றம், மருந்துகளை எடுத்துக்கொள்ளவும், சுகாதார பரிசோதனைகள் செய்துகொள்ளவும் அனுமதி வழங்கியது. நேற்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இதுதொடர்பான விசாரணை நடைபெற்றபோது, கார்த்தியின் பெற்றோர்களும் வழக்கறிஞர்களுமான சிதம்பரம் மற்றும் நளினி ஆகியோரும் நீதிமன்றம் வந்திருந்தனர். அப்போது, நீதிமன்ற அனுமதியுடன் கார்த்தியிடம் பேசிய ப.சிதம்பரம், கவலைப்படாதே என்றும் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்திடமும் சிபிஐ விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்