கர்ப்பிணி பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் செய்த அரசு மருத்துவர்கள்…!!!
நெல்லையில் உள்ள அன்னலட்சுமி என்பவர், காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 வருடங்கள் கழித்து கர்ப்பமாகியிருக்கிறார். இந்நிலையில் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட இவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதனைதொடர்ந்து இவருக்கு அங்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர். அரசு மருத்துவமனைக்கு சென்ற அவரை, மருந்து, மாத்திரை தருகிறோம் அவரை வீட்டில் வைத்து பார்க்குமாறு மருத்துவர்கள் அலட்சியம் காட்டியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.