லாரியை மறித்து கரும்பு தின்ற யானைகள்.! மரத்தின் மீது ஏறி தப்பிய டிரைவர், கிளீனர்.!
தமிழ்நாடு கர்நாடக எல்லையில் சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை மறித்து கரும்பு தின்ற யானைகள். அதனை கண்டு டிரைவர், கிளீனர் அச்சத்தில் மரத்தின் மீது தப்பித்தனர்.
கடந்த திங்கள்கிழமை மாலை கர்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு சென்றது. தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே லாரி வந்து கொண்டிருந்த போது, அந்த வழியே பாதையில் சிதறிக்கிடக்கும் கரும்பு துண்டுகளை சுவைப்பதற்காக அப்பகுதி காட்டு காட்டு யானைகள் உலா வந்து கொண்டிருந்தன.
கரும்பு லோடு லாரியை கண்டதும் யானைகள் மறித்துவிட்டன. பின்னர் லாரியில் இருந்த கரும்புகளை தும்பிக்கையால் பறித்து தின்றன. இதனை பார்த்து அச்சமடைந்த டிரைவர் மகேந்திரன் மற்றும் கிளீனர் விநாயக் ஆகியோர் பயந்து மரத்தின் மீது ஏறி அமர்ந்துவிட்டனர்.
சுமார் அரை மணி நேரம் மரத்தின் மீது அமர்ந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டனர். அதன்பின்னர், ஒரு இன்னொரு கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி அவ்வழியே வந்தது. அதன் பின்னர் யானைகள் வனப்பகுதிக்குச் சென்றன. யானைகள் வனப் பகுதிக்கு சென்ற பின்னர் டிரைவரும் கிளீனரும் மரத்தில் இருந்து கீழே இறங்கி தங்கள் லாரியை எடுத்துக்கொண்டு சர்க்கரை ஆலைக்கு விரைந்தனர்.