கர்நாடகா பாஜகவின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் – சீமான்
அண்ணாமலை அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலையும், கூட்டணி கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என சீமான் பேட்டி.
தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கடந்த 14-ஆம் தேதி அன்று `DMK Files’ என்ற தலைப்பில், முதல்வர் ஸ்டாலின், கனிமொழி , உதயநிதி உட்பட பல தி.மு.க அமைச்சர்கள் மற்றும் தி.மு.க-வின் சொத்து பட்டியல் என சில தரவுகளை வெளியிட்டார். அதோடு தனது ரபேல் வாட்ச் பில்லையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
சீமான் பேட்டி
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாகி உள்ளது. இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், அதுபோல் அவர்கள் கட்சியின் ஊழல் பட்டியலையும், கூட்டணி கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். கர்நாடகா பாரதிய ஜனதா கட்சி ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும். தம்பி ஒவ்வொன்றாக செய்வார் என்று நினைக்கிறேன்.
ஊழல் பட்டியலை வெளியிடுவதில் பயனில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானவரித் துறை, அமலாக்க துறையும் உங்களிடம் தான் இருக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அதனால் இந்த செய்தி எனக்கு வேடிக்கையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும், லண்டனில் வைக்கப்பட்டுள்ள பென்னிகுக் சிலை மூடிவைக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கூறுகையில், பென்னிகுக் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம் .போற்றத்துக்குரிய பெருந்தகை அவருக்கு அரசு உரிய தொகையை செலுத்தி கருப்பு துணியை அகற்ற செய்வதுதான் அதற்குரிய பெருமையாக இருக்கும். அது அரசு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.