கர்நாடகத்தால் நிராகரிக்கப்ட்ட தரமற்ற சைக்கிளை தமிழக மாணவர்களுக்கு வழங்கியதா..??? தமிழக அரசு…!என்ன பதில் சொல்லப்போகிறார் செங்கோட்டையன்..???
கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட சைக்கிள்கள் தரமற்றவை எனக் கருதி நிராகரிக்கப்பட்ட சைக்கிள்களை தமிழக அரசு தமிழக மாணவர்களுக்கு வழங்கியதாக புகார்கள் எழுந்துள்ளது.
இந்த முறைகேடு நடந்தாக கூறப்படும் சைக்கிள் விவகாரமானது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தழுதாளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு த்மிழக அரசால் வழங்கப்பட்டு வரும் இலவச சைக்கிள் திட்டத்தில் கீழ் வழங்கப்பட்டது.ஆனால் வழங்கப்பட்ட சைக்கிள் கூடையில் அண்டை மாநிலமான கர்நாடக அரசின் முத்திரை பதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், கன்னட மொழியில் வாசகங்களும் எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து விசாரிக்கையில் அந்த சைக்கிள்கள் அனைத்தும் கர்நாடக மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை என்றும் அந்த மாநில அரசால் சைக்கிள்கள் தரமற்றவை என கருதி நிராகரிக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது.இது குறித்து கர்நாடக பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் சைக்கிளை பெற்ற மாணவர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பள்ளிகல்வித்துறை சார்பில் கர்நாடக முத்திரைக்கு என்ன விளக்கம் கொடுக்க போகிறது..?என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.