கர்நாடக தேர்தல் – ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் வேட்புமனு வாபஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

கர்நாடகாவில் ஓபிஎஸ் அணியின் 2 வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். 

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ஆம் தேதி 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இந்த சமயத்தில், அதிமுகவும் அங்கும் களம் காண திட்டமிட்டது. ஏற்கனவே கர்நாடகாவில் தமிழர்கள் அதிகமுள்ள இடங்களில் அதிமுக பல முறை போட்டியிட்டு வென்றுள்ளது.

இதன் காரணத்தால் இந்த முறையும் போட்டியிட வேலைகளை ஆரம்பித்து. அதன்படி, ஓபிஎஸ் தரப்பில் மூன்று தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தார். இபிஎஸ் தரப்பில் ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவித்திருந்தார். இதில், புலிகேசி தொகுதியில் இபிஎஸ் ஆதரவாளர் அன்பரசன் வேட்புமனு தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்-ஐ தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து இரட்டை இலை சின்னமும் அவர்கள் வசமானது. இதனால் ஓபிஎஸ் தரப்பு பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த சமயத்தில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும், அதிமுகவின் பெயர் பாதிக்கப்பட கூடாது என்பதால்  தங்கள் தரப்பு வேட்பாளர்களான குமார் மற்றும் ஆனந்த்ராஜ் ஆகியோர் வாபஸ் பெற உள்ளனர் எனவும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர் ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர்கள். அதன்படி, கோலார் தங்கவயலில் ஆனந்தராஜ், காந்தி நகரில் குமார் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு.?

கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…

19 minutes ago

வைகுண்ட ஏகாதசி 2025-“கோவிந்தா” முழக்கத்துடன் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்..!

வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…

26 minutes ago

காட்டு பன்றிகள் வேட்டைக்கு அனுமதி! விளக்கம் கொடுத்த அமைச்சர் பொன்முடி!

சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…

46 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான்”…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

1 hour ago

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

2 hours ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

3 hours ago