Karnataka Minister Ramappa Timmapur - Prajwal Revanna [File Image]
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி தற்போதைய எம்.பியும், மஜத கட்சி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டு அவரை தற்போது போலீசார் தேடப்பட்டு வரும் நபராக அறிவித்துள்ளனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. பல பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை விடியோவாக எடுத்து வைத்து இருந்தார் என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
பாஜக கூட்டணியில் மஜத கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிரஜ்வல் ரேவண்ணா மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். அப்படி, காங்கிரஸ் மாநில அமைச்சர் ஒருவர் ரேவண்ணா மீது விமர்சனம் வைத்து தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் கலால் துறை அமைச்சர் ராமப்பா திம்மாபூர் அண்மையில் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து பேசுகையில், பிரஜ்வால், தன்னை சுற்றி பெண்கள் அதிகமாக இருப்பதால், பகவான் கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க நினைத்துவிட்டார் போல. இப்படி ஒரு கேவலமான மனிதனை நான் பார்த்ததே இல்லை. இந்த விஷயத்தில் கின்னஸ் சாதனை படைக்க நினைத்து விட்டார் என கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்து கடவுள் கிருஷ்ணரை ஒப்பிட்டு காங்கிரஸ் அமைச்சர் திம்மாபூர் முன்வைத்த கருத்துக்கு பஜவினர் பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர் மோகன் கிருஷ்ணா, காங்கிரஸ் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு திவால் ஆகிவிட்டது. இப்போது சனாதன தர்மத்தை துவம்சம் செய்து வருகிறது என கூறினார். இந்து கடவுள்களை அவமதித்த கர்நாடக அமைச்சர் திம்மாபூரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் பாஜகவினர் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டதால் தான் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் நிதி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…