மங்களூரு குக்கர் வெடிப்பு சம்பந்தமாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. – கர்நாடக ஏடிஜிபி தகவல்.
2 நாட்களுக்கு முன்னர்கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. அதில் ஆட்டோ ஓட்டுனரும், பயணித்தவரும் படுகாயமடைந்தனர். அது குறித்து கர்நாடக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், தமிழகத்தில் உதகையில் ஒருவரிடமும், நாகர்கோவிலில் ஒருவரிடமும் சிம் கார்டு வாங்கியது மற்றும், அதில் தொடர்பு கொண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த குக்கர் வெடிப்பு சம்பந்தமாக கர்நாடக ஏடிஜிபி பேசுகையில் இந்த சம்பவம் தொடர்பாக மைசூரில் 2 பேரிடமும், கோவையில் ஒருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைக்கு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான விசாரணைக்கு தமிழக காவல்துறை கர்நாடக செல்வதாகவும், கர்நாடக காவல் துறை தமிழகம் வருவதாகவும் தகவல் ஒன்று பரவியது. ஆனால் இது தவறான தகவல் என காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…