கர்நாடக சட்டமன்ற தேர்தல்! அதிமுக சார்பில் போட்டியிடலாமா? – நாளை கருத்து கேட்பு கூட்டம்!
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடலாமா? என்பது குறித்த கருத்துக் கேட்புக்கூட்டம்.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பொதுத்தேர்தல் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 10-ஆம் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி எனவும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனு தாக்கல்:
கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கு ஏப்ரல் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு பரிசீலினை ஏப்ரல் 21ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெற ஏப்ரல் 24-ஆம் தேதி கடைசி நாள் எனவும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.
மும்முனை போட்டி:
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே 3 முனை போட்டி நிலவி வருகிறது.
கருத்து கேட்பு கூட்டம்:
இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடலாமா? என்பது குறித்த கருத்துக் கேட்புக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெங்களூருவில் அதிமுக மாநிலச்செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடலாமா? என்பது குறித்து நாளை கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.