கமல் ,ரஜினி படம் புறக்கணிப்பு: கர்நாடகாவில் அதிரடி முடிவு!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடத்திய, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் படங்களை புறக்கணிக்க, கர்நாடகாவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர், கோவிந்த், ரஜினி, கமல் நடித்த படங்களை வாங்கக்கூடாது என, வினியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் நடித்த படங்களை திரையிடக் கூடாதென, திரையரங்கு உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பை மீறி, இவர்களது படங்களை திரையிட்டால், போராட்டம் நடத்துவோம். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, நாங்கள் பொறுப்பல்ல.
ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வந்த பின், கர்நாடகாவுக்கு எதிராக பேசுகின்றனர். கர்நாடகா, ரஜினியின் தாய் பூமி. வாழ்க்கை கொடுத்த மண்ணை விமர்சிப்பது, தாய் நாட்டுக்கு செய்யும் துரோகம். இதை, கன்னடர்களால் சகித்துக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.