அமைச்சர் கந்தசாமி தலைமையில் கிரண்பேடியை எதிர்த்து காங் எம்.எல்.ஏக்கள் தர்ணா…!

Published by
லீனா

கொரோனோ பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் உள்ள சிவப்பு அட்டைதாரர்கள் அதாவது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ வீதம் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.   ஆனால், வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படவில்லை.
இதனையடுத்து, அனைத்து பிரிவு மக்களுக்கும் இந்த அரிசியை வழங்கிடக் கோரி, அதிமுக எம்எல்ஏக்கள் அன்பழகன், வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் சட்டமன்ற படிக்கட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பாஜக எம்எல்ஏ சாமிநாதன்,என் ஆர்.காங் எம்எல்ஏக்கள் செல்வம், ஜெயபால், சுகுமாறன்இந்த போராட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் இரண்டு மணி நேரமாக நீடித்த நிலையில் அவர்கள் சட்டமன்ற கதவை மறித்து அமர்ந்தனர். அப்போது தலைமை செயலர், காவல் துறை தலைவர் ஆகியோர் முதல்வருடன் ஆலோசனை நடத்தி விட்டு வந்த நடந்தே வெளியே சென்றனர்.
இதனிடையே சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்த குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி, காங் எம்.எல்.ஏக்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் ஆளுநர் மாளிகை நோக்கி நடந்து வந்தனர். ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்ற அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து, அரிசி வழங்க துணைநிலை ஆளுநர் தடையாக உள்ளதாக கூறி குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி,அரசு கொறடா அனந்தராமன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி ஆகியோர் ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநர் கோப்பிற்கு அனுமதி அளிக்கும் வரை தர்ணாவை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

4 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

4 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

4 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago