கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..!
கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்தன.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தான்கல்லூரி மாணவியாக இருக்கும் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டே கெபிராஜ் தனியார் பள்ளியில் ஜூடோ பயிற்சியை பயின்று வந்ததாகவும் அப்போது போட்டி ஒன்றுக்கு காரில் செல்லும்போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கெபிராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர், கெபிராஜை ஜூன் 14-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தனர். கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீதான பாலியல் புகார் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பரிந்துரையை ஏற்று டிஜிபி திரிபாதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.