பாலியல் புகாரில் கராத்தே மற்றும் ஜுடோ பயிற்சியாளர் ஜெபிராஜை அண்ணா நகர் மகளிர் போலீஸ் கைது செய்தது.
சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு உள்ளாவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதைத்தொடர்ந்து, பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியரான ராஜகோபாலன் தொடர்ச்சியாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், நாகராஜனை ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், சென்னையில் கெபிராஜ் நடத்தி வந்த தற்காப்பு கலை பயிற்சியகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்த 26 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கெபிராஜ் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது.
தற்காப்பு கலை பயிற்சிக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் கெபிராஜ் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கெபிராஜை கைது செய்து சென்னை அண்ணாநகர் அணைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…