இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 2-ஆம் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை கடுமையாக பின்பற்றுவது, பொதுமக்களின் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது.
இந்நிலையில் சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீரை பருகவும் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சியினர், தினமும் 2சுமார் 2000 பேருக்கு இலவசமாக கபசுர குடிநீரை வழங்கி வருகின்றனர். இதனை அப்பகுதி மக்கள் சமூக விலகலை கடைபிடித்து வாங்கி செல்கின்றனர். பெரியவர்களுக்கு 50 மிலியும், சிறியவர்களுக்கு 30 மிலியும் வழங்கப்படுகிறது. சிலர் வீட்டிற்கு பாத்திரத்தில் வாங்கி செல்கின்றனர். இந்த செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…