மாணவர் மரணத்தில் மர்மம்.? அலட்சியம் தான் காரணமா.? விசாரணை குழு அமைத்த மாநில அரசு.!

Published by
மணிகண்டன்

காரைக்காலில் மாணவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் விசாரிக்க மருத்துவர் குழுவை புதுவை அரசு நியமித்துள்ளது.  

புதுசேரி, காரைக்காலில் நேரு நகர் பகுதியை சேர்த்தவர் ராஜேந்திரன் இவரது இரண்டாவது மகன் பாலமணிகண்டன் அந்த பகுதி தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இதே பள்ளியில் பாலமணிகண்டன் உடன் படிக்கும் சக மாணவியின் தயாரான சகாயராணி விட்ட்டோரியா என்பவர், தனது மகளை விட பாலமணிகண்டன் நன்றாக படித்து விட கூடாது என்பதற்காக, குளிர்பானத்தில் விஷம் கலந்து , அதனை பள்ளி காவலாளி மூலம் பாலமணிகண்டனுக்கு கொடுத்துள்ளார்.

sakayarani

இதனை அறியாமல் குளிர்பானத்தை குடித்த மாணவன், வாந்தி எடுத்துள்ளான். இதனை அடுத்து, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் பாலமணிகண்டன். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவன் உயிரிழந்துவிட்டான்.

இதனை அடுத்து, மாணவனின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் சகாயராணி கைது செய்யப்பட்டார். மேலும், அரசு மருத்துவமனை அலட்சியத்தால் தான் மாணவன் உயிரிழந்தான் என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.

அதாவது முதலில் வாந்தி மயக்கம் ஏற்பட்டதும் அரசு மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர். முதலில் பரிசோதித்து, ( அனுமதி சீட்டு பதியவில்லை என கூறப்படுகிறது)  மருந்து கொடுத்து அனுப்பியுள்ளனர். பிறகு மீண்டும், வீட்டில் அதே போல வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மீண்டும் மருத்துவமனைக்கு மாணவன் கொண்டு செல்லப்பட்டுள்ளான்.

அதன் பின்னர் தான், மாணவன் உயிரிழந்துள்ளான். இதன் காரணமாக பொதுமக்கள் அரசு மருத்துவமனை மீது குற்றம் சாட்டினார். மாணவர் இறப்புக்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம். போதிய மருத்துவர்கள் இல்லை என குற்றம் சாட்டினார்.

இதனை, அடுத்து, தற்போது குழந்தைகள் நல தலைமை மருத்துவர் முரளி தலைமையில் 3 பேர் கொண்ட மருத்துவ குழுவை புதுவை மாநில அரசு நியமித்துள்ளது. இவர்கள் விசாரணை மேற்கொண்டு மாணவன் மரணத்தில் உள்ள உண்மையான காரணத்தை கூற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

15 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

16 hours ago