காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்.! 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட்.! மேலும் ஓர் முக்கிய உத்தரவு….
காரைக்கால் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 2 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்ய புதுசேரி முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காரைக்கால் பள்ளி மாணவன் பாலமணிகண்டன் சில நாட்களுக்கு முன்னர் குளிர்பானத்தில் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார். சக மாணவியின் தயார் சகாயராணி, தன் மகளை விட நன்றாக படித்து விட கூடாது என நினைத்து விஷம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.
மாணவனுக்கு விஷம் கொடுத்தது சகாயராணி தான். ஆனால், அவன் உயிரிழந்ததுக்கு காரணமாக, காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சிய போக்கே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றசாட்டு வலுத்தத்தை அடுத்து புதுசேரி அரசு, 3 பேர் கொண்ட மருத்துவ குழுவை அமைத்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கோரியது. அந்த குழு நேற்று சுகாதார துறை செயலாளரிடம் இந்த அறிக்கையை தாக்கல் செய்தது.
அதன் படி , மாணவன் விஷம் அருந்திய நிலையில், வாந்தி மயக்கம் என அரசு மருத்துவமனையில் அவரச பிரிவுக்கு வருகையில், அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காமல், வீட்டுக்கு அனுப்பிவிட்டனராம். அதன் பின்னர் மீண்டும் அதே போல உடல் நல குறைவு ஏற்ப்படவே, அதன் பின்னர் மீண்டும் மருத்துவமனை அழைத்து வரப்பட்ட அதன் பின்னர் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனின்றி மாணவன் உயிரிழந்துள்ளான் என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சம்பந்தப்பட்ட விஜயகுமார், பாலாஜி எனும் இரு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுசேரி முதல்வருமான ரங்கசாமி. மேலும், காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற உத்தரவு பெற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என மொத்தமாக 42 பேர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்றாமல்,
புதுசேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வேலை பார்ப்பது முதலவர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவர்கள் உடனடியாக காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற தொடங்க வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கான சம்பளம் கொடுக்கப்பட மாட்டாது எனவும் முதல்வர் கூறியுள்ளாராம். இது தொடர்பான அரசு உத்தரவு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.