15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கபசுர குடிநீர்! எந்த அளவு குடிக்க வேண்டும்?!
கொரோனா முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து இருக்குமாறு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மக்கள் இந்த வைரஸில் இருந்து தப்பிக்க இயற்கையை நாடி வருகின்றனர். இயற்கையாக நம் உடையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை தேடி உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் ஆடாதொடை, அக்ரஹாரம், கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கபசுர குடிநீரை மக்கள் தேடி வாங்கி பருகுகிறார்கள். என இம்காப்ஸ் செயலாளர் மற்றும் மருத்துவர் அண்மையில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மருத்துவ குடிநீரை பெரியவர்களுக்கு 40 – 50 மிலி வரை கொடுக்கலாம் எனவும், காலையில் வெறும் வயிறில் எடுத்து கொள்ள வேண்டும் எனவும் இது, காய்ச்சல் அதிகமாக இருந்தால் மாலை நேரத்தில் கூடுதலாக ஒருவேளை எடுத்து கொள்ளலாம் எனவும், இது போல ஒருவாரம் தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டும் எனவும், சிறியவர்களுக்கும் 15 முதல் 20 மிலி வரை இத குடிநீரை கொடுத்துவரலாம் எனவும் இம்காப்ஸ் செயலாளர் மற்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.