கபசுர குடிநீரை அனைவருக்கும் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது.! – உயர்நீதிமன்றம் கருத்து.!
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் சித்த மருத்துவ மூலிகை மருந்தான கபசுர குடிநீரை பெரும்பாலானோர் அருந்தி வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கும் பலர் கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் ஆடாதொடை, அக்ரஹாரம், கற்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் கபசுர குடிநீரை அனைவருக்கும் அரசு வழங்கவேண்டும் என சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, கபசுர சூடிநீரை அனைவருக்கும் வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது. ஏற்கனவே கொரோனா தடுப்பு மருந்து கண்டறிய சித்தமருத்துவ குழுவையும் அரசு நியமித்துள்ளது. என தீர்ப்பளித்து இந்த வழக்கை முடித்துவைத்தார்.