கன்னியாகுமரி – சுற்றுலா கட்டணம் இன்று முதல் உயர்வு!

Default Image

கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்வு.

கன்னியாகுமரியில் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், குமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து கட்டணம் இன்று முதல் உயர்த்தப்படுபடுகிறது என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளூர் சிலைக்கு இயக்கப்படும் படகிற்கான கட்டணம் உயருகிறது. சாதாரண கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.75ஆகவும், புதிய சிறப்பு கட்டணம் ரூ.200ல் இருந்து ரூ.300ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் தினந்தோறும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் குவிவது வழக்கம்.

மேலும், விடுமுறை நாட்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் கானப்படும். இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் சூரிய உதயத்தை காணவும், விவேகானந்தை நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்தும் வருகின்றனர். இந்தநிலையில், புதிய கட்டணமாக இன்று முதல் ரூ.300ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்