யாஸ் புயல் எதிரொலியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கியது. தற்போது அது முழுவதுமாக கரையை கடந்து முடித்துள்ளது. அந்த புயல் தற்போது பாலசோர் என்ற இடத்தில் மையம் கொண்டுள்ளது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழந்து தீவிர புயலாக மாறும் என்றும் அதற்கு பிறகு புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனுடைய தாக்கம் காரணமாக வட தமிழகத்தில் 40 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாஸ் புயல் எதிரொலியால், கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இரன்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை வருவதால் மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. கனமழை காரணமாக கன்னியாகுமாரி மாவட்டம் வெள்ளக்காட்சியாக காணப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…