கன்னியாக்குமரி:கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு இன்று(டிச.24 ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வரும் டிச.25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.இதனை முன்னிட்டு இன்று இரவிலிருந்தே தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
பொதுவாக,மற்ற மாவட்டங்களை விட கன்னியாக்குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெறும்.இதனால்,டிச.25 ஆம் தேதி அரசு விடுமுறை என்றாலும்,ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் முன்னதாகவே டிச.24 ஆம் தேதி கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.
இந்நிலையில்,கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாக்குமரி மாவட்டத்தில் இன்று (24 ஆம் தேதி)உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி,கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் இன்று (24 ஆம் தேதி)உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏதுவாக ஜனவரி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…