கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து…!!!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
படகு போக்குவரத்து ரத்து :
குமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லக் கூடிய படகு போக்குவரத்து, கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்றால் கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கியது.
நேரம் செல்ல செல்ல கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால், படகு சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் படகு பயணம் செய்வதற்காக டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.