ஜூலை 26ந்தேதி உலகம் முழுதும் இரண்டு கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து ‘வாழும் கலை’ அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக அன்றாடம் வழிபாடுகளில் பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளை, தியானம் மூலம் உயிர்ப்பிப்பதோடு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குணமடைய செய்கின்ற வலிமையை பெற கந்த சஷ்டி கவசம் உதவி செய்கிறது.
பாடல் நிகழ்ச்சிக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமை வகிக்கிறார். சமூக ஊடகங்கள் வழியாக, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது, மிக பிரமாண்ட ஒரு ஆன்மிக ஒருங்கிணைப்பு பிரார்த்தனையாக நிகழ போகிறது.இதில் பங்கு கொண்டு பாராயணம் செய்ய இணைய விரும்புவோர், ‘பேஸ்புக் லைவ்’ bit.ly/FBKavacham, ‘யூ டியூப் லைவ்’ bit.ly/YTKavacham ஆகிய முகவரிகளை டைப் செய்து, உள்ளீடு மூலமாக நுழையலாம். மேலும் விபரங்களுக்கு, வாழும் கலை அமைப்பு பிரதிநிதிகள், தாஸ், 94433 56249, வெங்கடேஷ் 94433 70608 ஆகியோரின் மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…