#கந்தசஷ்டி_கொச்சைப்பேச்சு-“சாது மிரண்டால் காடு கொள்ளாது” கண்டனம்

Published by
kavitha

‘கருப்பர் கூட்டம்’ என்கிற பெயரில், ‘யூ டியூப் சேனலில்’ஆபாச புராணம் என்கிற பெயரில் புனித நூலாகிய கந்தசஷ்டி கவசத்தை மிகவும் கேவலமாக சித்தரித்து, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டு உள்ளதாகவும் இதனைப் போன்ற அருவருக்கதக்க கருத்துகளை பரப்பி வருவதாக தமிழகத்தில் முருக பெருமானை கடவுளாக வழிபடுகின்ற மக்கள் மட்டுமின்றி ஹிந்து முன்னனி தலைவர்களும் கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

அவ்வாறு தேவராய சுவாமிகள் அருளிய ‘கந்தர் சஷ்டி கவசம்’ குறித்து, ‘யு டியூப்’ சமூக வலைதளத்தில் இழிவாக பேசியவர், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்பது புரிந்து, மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று  தமிழக தர்மரக்சன சமிதி தலைவர் ஓங்காரானந்தா, சுவாமி சிவயோகானந்தா உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தர்மரக்சன சமிதி தலைவர் சுவாமி ஒங்காரானந்தா கூறியதாவது: கந்தர் சஷ்டி கவசத்தை ஏன்? இழிவாக பேசினர் எனத் தெரியவில்லை. கந்தர் சஷ்டி கவசத்தை பக்தியுடன் பாடுவோருக்கு மன நிம்மதி கிடைக்கும். நம் சாஸ்திரப்படி, நம் உறுப்புகள் உயர்ந்தவை.

அந்த வகையில், பால் தரும் தாயின் மார்பகம் ஆனது தெய்வீகம். மதங்களின் நம்பிக்கையினை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உடல், உடை கறுப்பாக இருக்கலாம்.

ஆனால், உள்ளம் கறுப்பாக இருக்கக் கூடாது. கந்தர் சஷ்டி கவசத்தை இழிவாக பேசியவர் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை புரிந்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அதே போல மதுரை சின்மயா மிஷன், சுவாமி சிவயோகானந்தா இது குறித்து கூறியதாவது: சமீபகாலமாக ஹிந்து கடவுள், நுால்களை இழிவாக பேசி, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். கந்தர் சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசுவதால், ஹிந்துக்களின் நம்பிக்கை சிதையாது; மாறாக ஹிந்துக்களிடம் ஒற்றுமையும், எழுச்சியையுமே ஏற்படுத்தும். கந்தர் சஷ்டி கவசம் போல, பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசத்தை பாடுவது உடல், மனதிற்கு மாமருந்து. இழிவாக பேசுபவர்கள் பின்னணி குறித்தும் கண்டறிந்து மீண்டும் பேசாமல் தடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இவ்விவகாரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் கூறியதாவது: சமீபகாலமாக, ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை, பதிவுகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தும் போக்குகள் அதிகரித்து வருகிறது.

முருக பக்தர்கள் அனைவரும்  மிகவும் புனிதமாக கருதும், கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது, முருக பக்தர்களை மட்டுமின்றி, அனைத்து ஹிந்து மக்களின் மனதையும் கடுமையாக  காயப்படுத்துவதாக உள்ளது. மத துவேஷ கருத்துகளை பதிவிட்டு சர்ச்சைகளை உருவாக்குபவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று அவர் கூறியுள்ளார்.

Published by
kavitha

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

19 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

53 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

57 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago