திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவரை விட்டு காதலனுடன் ஓடிப்போன புதுப்பெண்!
- கன்னியாகுமரி மாவட்டத்தில் வேல்முருகன் – ராஜ்யஸ்ரீ என்பவர்களுக்கு கடந்த மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
- ராஜ்யஸ்ரீ திருமணமாகி ஒரு மாதத்திற்குள் கணவரை விட்டு பிரிந்து தன் காதலனுடன் சென்றுவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளச்சந்தை எனும் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் கருப்புக்கோடு எனும் பகுதியை சேர்ந்த ராஜ்யஸ்ரீ என்பவரைகடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே அவர் கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் காலை வேளையில் தன் மனைவி ராஜ்யஸ்ரீயை காணவில்லை என வேல்முருகன் தேடியுள்ளார். ஆனால், அவர் கிடைக்கவில்லை. பிறகு ராஜ்யஸ்ரீ வீட்டருகே உள்ள சந்தோஷ் என்பவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சம்பவ நாளன்று வேல்முருகன் வாட்சாப்பிற்கு ‘ உன்னை எனக்கு பிடிக்கவில்லை அதனால் நான் உன்னை விட்டு பிரிகிறேன்.’ என வாய்ஸ் செய்தியை ராஜ்யஸ்ரீ அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து, தன் மகன் திருமணமான பெண்ணை கூட்டி சென்றதாக கூறி, அதனால் மனமுடைந்து சந்தோஷ் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, காணாமல் போன ராஜ்யஸ்ரீ, சந்தோஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.