மீன் குழம்பு சமைக்க சொன்ன மகன்.! தள்ளிவிட்டு கொலை செய்த தந்தை.!?
கன்னியாகுமாரியில் மீன் வாங்கி வந்து சமைக்க சொல்லி தந்தையை தொந்தரவு செய்துள்ளார் மகன். அப்போது ஏற்பட்ட தகராறில் தந்தை தள்ளிவிட்டு மகன் உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரியில் ஆட்டுப்பட்டி காலனியில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மகன் பெயர் கோலப்பன். கோலப்பன், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
கோலப்பன் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோலப்பன் மீன் வாங்கி வந்துள்ளார். அந்த மீனை சமைத்து தரச்சொல்லி தனது தந்தை தங்கவேலுவை மகன் கோலப்பன் தொந்தரவு செய்துள்ளதாக தெரிகிறது.
அப்போது ஏற்பட்ட தகராறில் தந்தை தங்கவேலு மகன் கோலப்பனை தள்ளிவிட்டதாக தெரிகிறது. இதில், கிழே விழுந்த கோலப்பன் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அப்பகுதி போலீசார் தங்கவேலுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனது சொந்த மகனையே தந்தை தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தற்செயலாக நடந்த விபத்தா, அல்லது கொலையா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறன்றனர்.