2020ம் ஆண்டுக்கான ஔவையார் விருதை தட்டி சென்ற கண்ணகி.!
2020ம் ஆண்டிற்கான ஔவையார் விருதை திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணகி என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச்செயலகத்தில், அவருக்கு விருது வழங்கியதோடு, ரூ.1 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தார். பின்னர் பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட கண்ணகி, மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தி, குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுத்தது போன்ற பணிகளுக்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.