கனியாமூர் மாணவி மரணம் மேலும் 2 ஆசிரியர்கள் கைது
கள்ளகுறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி +2 மாணவி மர்ம மரணம் தொடர்பாக வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா மற்றும் கணித ஆசிரியர் கிருத்திகா கைது செய்யப்ட்டுள்ளனர்.
நேற்று பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை தொடர்ந்து இந்த 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 10 க்கு மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.