தூத்துக்குடி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத கனிமொழி! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

தூத்துக்குடியில் துணை முதலமைச்சர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பங்கேற்கவில்லை. இது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நச்சென்று பதில் கூறிய உதயநிதி ஸ்டாலின்...!

Udhayanithi Stalin

தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893 பயனாளிகளுக்கு, ரூ.206.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற வளர்ச்சி பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசினார், அதில், ‘ஆய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. திட்டம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளேன்’, எனக் கூறினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஏன் கலந்து கொள்ளவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அந்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “அவர் வெளிநாடு சென்று இருக்கின்றார். வரும் வாரங்களில் இரண்டு பேரும் சேர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளோம்” என கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு? முதலமைச்சர் இது குறித்து அறிவிப்பார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்