ஒரு கோவிலை முழுவதுமாக கட்டி முடிக்காமல் திறக்கலாமா? கனிமொழி கேள்வி

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்றது.

இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து இன்று காலை மாநாட்டுத் திடலில் உள்ள கொடிமரத்தில் உள்ள கட்சிக் கொடியை திமுக எம்.பியும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி ஏற்றிவைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார்.

பின்னர் இளைஞரணி மாநாட்டில் கனிமொழி பேசுகையில், “பேரறிஞர் அண்ணா திமுகவைத் தொடங்கியபோது நம்முடைய கட்சிக் கொடியில் கருப்பு சிவப்பு வண்ணங்கள் இருக்கிறது.

கருப்பு நிறம் இந்த சமூகத்தில் நிலவக்கூடிய அரசியல், சமூக, பொருளாதாரத்தின் இருண்ட பக்கங்களைக் காட்டும். இந்த நிலை மாற வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, கீழே இருக்கக்கூடிய சிவப்பு நிறம் இருக்கிறது. இந்த கருப்பு, சிவப்பாக மாற வேண்டும் என்றால், அது உதயசூரியனின் ஒளியாலே அந்த இருண்மை ஒழிக்கப்படும் என்றார்.

நாடும் நமதே! நாற்பதும் நமதே..! திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேருரை

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் அண்ணாவின் கனவு மற்றும் கருணாநிதி வழியிலேயே ஏறத்தாழ நிறைவேறிவிட்டது. நீங்கள் கேட்கலாம், எல்லாம் கிடைத்துவிட்டது, கொடியில் ஏன் கருப்பு இருக்கிறது. முழுவதும் சிவப்பாக மாற்றிவிடலாமே என்று.

தென்னகத்தில் இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் சிவப்பு வந்துவிட்டது. ஆனால், வடநாட்டில் இன்னும் கருப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை விரட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது.

பிரதமர் நாளை கோவிலைத் திறக்கிறார். அதைப்பற்றி எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால் ஒரு கோவிலை முழுவதுமாக கட்டி முடிக்காமல் திறக்கலாமா? ஆனால், நாங்கள் தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறோம். நாங்கள்தான் சனாதன தர்மத்தை காப்பாற்றுகிறோம் என்று பாஜக கூறிக்கொள்கிறது.

ஒரு தனியார் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்படக்கூடிய கோவிலுக்காக அரை நாள் விடுமுறையும், இலவச ரயிலும் விடப்பட்டுள்ளது.

இதுபற்றியெல்லாம் கேள்வி கேட்டால் நமக்கு ICE வைப்பார்கள். ICE என்றால், Income Tax,CBI,ED இவை மூன்றும் நம்மை தேடி வரும்” என பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்